சித்தர் கால சிறந்த நாகரிகம்!

13

வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் ஆகிய மூன்றும் முதன்மை நாடிகள் என்பதைக் கடந்த இதழில் விவரித்திருந்தோம். நாடிகளின் அளவை சமமாக வைத்துக் கொள்வதற்கும், மரணத்தைத் தள்ளிப்போடுவதற்கும் சித்திபெற்ற சித்தர் பெருமக்கள் ஒரு எளிய மருத்துவ முறையை மக்களுக்குக் கற்றுக்கொடுத்தனர்.

நோயின்றி நீண்ட காலம் வாழலாம்!

Advertisment

nn

அது என்னவெனில், சம அளவு சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மண் சட்டியில் இளவறுப்பாக வறுத்து, நன்றாகப் பொடி செய்து சலிக்கவேண்டும். அதனோடு, அப்பொடிக்குச் சமமான எடையளவு பதனீரிலிருந்து தயாரித்த வெல்லத்தைச் சேர்த்து, தினமும் இரவில் படுப்பதற்குமுன் மூன்று விரல்களால் அந்தப் பொடியை அள்ளி வாயில் போட்டு தண்ணீர் அருந்திவிட்டுத் தூங்கவேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால், எந்த நோயும் வராமல் மனிதன் நீண்ட காலம் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்பதைக் கற்றுத் தந்தனர்.

கோரோசனம் எனப்படும் மகா மருந்து!

இதுதவிர, நம் உடலிலுள்ள "அகத்தீ'’ அல்லது ‘"நந்தீ'’ நிலைத்திருப்பதற்கு ஒரு மகா மருந்தையும் கண்டறிந்தனர்.

Advertisment

அது என்னவென்றால், 14 வருடங்கள் எந்த ஒரு நோய்த்தாக்குதலுக் கும் ஆளாகாத காளை மாடு, பசுவின் பக்கம் கவரப்படாமல் பிரம்மச்சரிய முறையில் வாழ்ந்து வந்திருந்தால், அதன் இரு கொம்புகளுக்கு நடுவில் மூளையில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். அதன் விளைவாக, அந்தக் காளையின் உடம் பில் பல மாற்றங் கள் உருவாகி, இயற்கை மரண மடையும் தறுவா யில், அதன் பித்தப்பை மகா மருந்தாக மாறும். அந்த மருந்திற்கு ‘"கோரோசனம்'’ என்று பெயரிட்டனர்.

இதுபோன்ற காளைகளை மாட்டு மந்தைகளில்தான் காணமுடியும். கோரோசனம் உடம்பில் உருவாகிய வுடன், அந்த மாடுகளின் கடைக் கண்களில் நீர் வழிந்தபடியே இருக்கும். அதுபோல் கண்களிலிருந்து நீர் வடிந்தால், அந்த மாடு விரைவில் மரணித்துவிடும். அத்தருணத்தில், தன்னை வளர்த்தவன்மீது மிகுந்த பாசத்தோடு பழகும்.

அவன் சொல்வதையெல்லாம் கேட்கும்.

அவன் செல்லும் வழியிலெல்லாம் அவனோடு சேர்ந்து பயணிக்கும். அதிகமாகப் புல் மேயாது. ஓய்வு நேரங்களின்போது அவனை நக்கிக்கொடுக்கும்.

ஓராண்டு சீரான வாழ்வு!

Advertisment

vvv

மாட்டு மந்தைகளில் ஆயிரத்தில் ஒன்றுதான் இவ்வாறு பிறக்கும். இவற்றை சித்தர்கள் கூர்ந்து கவனித்து வருவார்கள். அந்தக் காளைமாடு இயற்கை மரணம் எய்தியவுடன், அதன் இடையரிடமிருந்து- அதாவது மாடு மேய்த்தவரிடமிருந்து, அவர் கேட்கும் பொருளைக் கொடுத்து விலைக்கு வாங்குவர். இறந்த இரண்டரை நாழிகைக்குள் அம்மாட்டுக்குப் பூசை செய்து, அதன் வயிற்றைக் கிழித்து பித்தப்பையையும், கொம்புக்கு நடுவிலிருக்கும் கெட்டியான வேதிப்பொருளையும் எடுத்து, அதனுடன் வன்னிமரத்துப் பட்டை, வெண்மிளகு போன்றவற்றைச் சேர்த்து குழித்தைலம் இறக் குவார்கள். (குழித்தைலம் இறக்கும் முறையை வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்!).

இக்குழித்தைலத்தோடு வில்வ வேர்ப் பட்டை மற்றும் இலந்தைப்பழக் கொட்டை யைச் சேர்த்து மெழுகாக்கி வைத்துக் கொள்வர். இதனை, மாசி மாத அமாவாசை நாளில் மூன்று மிளகளவு அதிகாலையில் சாப்பிட்டுவிட்டு, அன்று முழுவதும் உண்ணா நோன்பிருந்தால், அது முழுமை யாக ஜீரணமாகி, நமது உடம்பில் மகா மருந்தாக ஒரு வருட காலத்திற்கு வாத, பித்த, சிலேத்தும நாடிகளில் எந்தச் சூழலிலும் மாற்றம் ஏற்படாதவாறு நிலைக்கச்செய்து, ‘அகத்தீ அல்லது நந்தீ’ நமது உடலிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும். இதன் பலனாக, நமது இதயமும் நுரையீரலும் ஒருவருட காலத்திற்கு சீராகச் செயல்படும். மதிநுட்பமும் மிகக் கூர்மையாக இருக்கும்.

சிவத்தை நோக்கியபடி காளை!

இதனைக் குறிப்பிடுவதற்காகவே, ஒவ்வொரு குருநாதன்- அங்காளம்மன் கோவில் முன்பும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படும் கோவில்களிலும், அவர் களை நோக்கி காளைமாடு, தனது நாக்கினை மூக்கை நோக்கி வெளியே உயர்த்திக் காட்டியவாறு அமர்ந்துள்ள நிலை யைப் பிரதிஷ்டை செய்தனர். இதனை "அகத்தீயாரப்பர்'’ அல்லது ‘"நந்தீசர்'’ அல்லது ‘"திருநந்தீ'’ என்று பெயரிட்டு வணங்கிடச் செய்தனர். இதன்மூலம், சிவலிங்க வடிவமான ரத்த ஓட்டத்தையும், சுவாச ஓட்டத்தையும் சீராக்கக்கூடிய மருந்தும், உடற்சூட்டினை மாறாமல் பாதுகாக்கும் மருந்தும் காளை மாட்டிற்குள்தான் இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, காளை வடிவச் சிலையை சிவத்தை நோக்கி அமைத்தனர். இதன்மூலம், மிக உயர்ந்த உண்மை ரகசியங்களை உருவகப்படுத்தினர்.

நந்தீ சிலை ரகசியம்!

dd

இரு கொம்புகள்: ஒரு மனிதன் மரணிக்கும் தறுவாயில் மூச்சுக் காற்றானது, அவனுடைய தொப்புள் அல்லது நாபி இருக்குமிடம்வரை வெளிவந்து செல்லும். அது படிப்படியாக மூக்கு நுனிவரை குறைந்து நுரையீரலில் முடிந்துநிற்கும். அதுபோல், அவனது மதி- அதாவது நினைவாற்றல் + அறிவு விரிந்த அளவிலிருந்து குறைந்து குறைந்து மூச்சு சுழியாகும்போது, அதுவும் சுழியாகிவிடும். காளையின் இடது கொம்பை மனிதனின் மதிநுட்பத்திற்கும், வலது கொம்பை மனிதனின் சுவாச அளவிற் கும் உருவகப்படுத்தினார்கள். இந்த இடத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப் பட்ட காளையின் வடிவத்தை மனதில் கொள்ளவேண்டும்.

மூச்சுக் காற்றும் மதிநுட்பமும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது.

காளையின் கண்கள்: காளையின் இடதுகண் அண்டத்தின் பேரொளி வெடிப்பையும், வலது கண் அண்டத்திலுள்ள கரும்புள்ளியையும் குறிக்கின்ற நாத விந்துவை தரிசனம் செய்துகொண்டிருக்கின்றன.

அதாவது, நாதம் என்பதை, ஒரு வட்டத் திற்குள் வட்டமையத்தை நடுவாகக்கொண்டு பல கோணங்கள் அமைத்தால், வட்ட மையத்தில் ஒரு சிறிய வட்டவடிவ ஒளிப்புள்ளி தோன்றும். இதையே, நாத வடிவமான இடக்கண்ணாகச் சித்தரித்திருக்கின்றனர்.

வலது கண் (விந்துப்புள்ளி அல்லது அண்டக் கருந்துளை): காளையின் வலது கண்ணை, இப்பேரண்டத்தில் எல்லாப் பொருள்களையும் தன்னுள் விழுங்கக்கூடிய கருந்துளைக்கு உருவகப்படுத்துகின்றனர்.

அதாவது, ஒரு வட்டத்தினுள்ளே வட்ட மையத்தைக் கடந்து செல்லுமாறு பல ஆயிரம் கோடுகள் வரைந்தால், வட்ட மையத்தில் ஒரு கரும்புள்ளி தோன்றும். இதற்கு விந்துப்புள்ளி அல்லது கருந்துளை என்று பெயர்.

வட்டத்தின் நடுவே ஒரு கோடு போட்டால், இரு 180 டிகிரி கோணமாகும். அதன் நடுவே கோடு போட்டால், இரு 90 டிகிரி கோணமாகும். அதன் நடுவே ஒரு கோடு போட்டால், இரு 45 டிகிரி ஆகும். இவ்வாறு தொடர்ச்சியாக, வட்டத்தைக் கோணங்களின் பாதியாகப் பிரித்துக்கொண்டே வரும்போது 0 டிகிரி கோணம் கிடைக்கும். அப்போது, அவ்வட்டத்தின் நடுவே விந்து எனும் கரும்புள்ளி கிடைக்கிறது. நந்தீ சிலையில் வலக்கண்ணாக இதையே உருவகப் படுத்தியுள்ளனர்.

நந்தீயின் உடல்: இவ்வுலகத்திலேயே சக்திவாய்ந்த மந்திரமாகக் கருதப்படும் விஞ்சை மந்திரத்தின் அச்சாரமாக, நந்தீ சிலையின் உடல் அமைப்பைக் குறிப்பிடு கின்றனர்.

நந்தீயின் நான்கு கால்கள்: நந்தீ சிலையின் நான்கு கால்களானது, பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, அழிப்பு, ரட்சிப்பு ஆகிய தொழில்களுக்கான மூலாதார வித்தொலியும், மந்திர பீஜ ஒலிகளுமான நசி, மசி, வசி, யசி ஆகியவற்றைக் குறிக்கின்றன.

நந்தீ சிலையின் காதுகள்: நந்தீயின் இடது, வலது காதுகள் பிரபஞ்சத்திலிருந்து உருவாகிக்கொண்டேயிருக்கும் அ, உ எனும் எட்டிரண்டு மந்திர அட்சரங்களுக்குரிய பீஜ மந்திரங் களை அனுதினமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன என்று குறிப் பிட்டுள்ளனர்.

அவை பின்வருமாறு:

தமிழில் "அ' என்றால் எட்டு என்ற எண்ணையும், "உ' என்றால் இரண்டு என்ற எண்ணையும் குறிக்கின்றன. அதனால், கீழ்க்கண்ட அட்சரங்களும் அதற்கான மந்திரங்களும் வரையறுக் கப்பட்டுள்ளன.

fs

நந்தீயின் நாசிகளும் நாக்கும்: நந்தீ சிலையிலுள்ள நாக்கின் நுனிப்பகுதி, அதன் இரு நாசித்துவாரங் களின் நடுப்பகுதியை நோக்கி உயர்ந்து காணப்படும். இந்த நிலை, மலைக்கூத்து என்ழைக்கப்படும் "வாசி யோக' நிலை யினைக் காட்டுகிறது. இந்த வாசியோகப் பயிற்சியை மனிதன் செய்யும் போது, "துவாத சாந்த நிலை' எனப்படும் இரு நாசித் துவாரங்களின்வழியே சமமாக மூச்சுக் காற்று உள்ளே, வெளியே செல்லும். இத்தன்மை கொண்ட சுழு முனை ஓட்டமானது, மனசஞ்சலமற்ற சாந்த நிலையான சமாதி நிலையை அனுபவிக்கச் செய்யும்.

அப்படி ஒரு நிலைக்கு மனிதனின் மனம் சென்றுவிட்டால், இயற்கையின் உண்மை ரகசியங்கள் எளிதாக மனித மூளைக்குப் புரிந்துவிடும். ஆகவே, கடந்த அத்தியாயத் தில் குறிப்பிட்டவாறு, ஒவ்வொரு குரு மாரும் மருதநில நாயகனான சோனைமுத்தையாவை, முடிசூட்டும் முன்னாளில் வாலைகுருநாதன்- அங்காளம்மன் கோவிலின் உண்மை ரகசியங்களை உணர்ந்து, இயற்கையின் ஆற்றல்கள் அனைத்தையும் தன் அகத்துள்ளே நிலைநிறுத்தி, பேராற்றல் மிக்க நாயகனாக்கு வார்கள். அந்த முறையை வரும் அத்தியாயத் தில் காண்போம்!

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்